மலேசியாவில் இருந்து தேனிக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட பெண்- பேஸ்புக் கூலிப்படை கைது

தேனி மாவட்டம் போடியில் போலீசார் நேற்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த நபர்கள் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.


அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே காட்டுநாயக்கன்பட்டி நேரு என்ற பெரியசாமி என்பவரின் மகன் அசோக்குமார்(28).


இவர் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் அசோக்குமாரை காண அமுதேஸ்வரி தேனி வந்திருக்கிறார்.