பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அவரது தந்தை காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அதே இடத்தில் குற்றவாளிகளை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்த போலீஸாரின் செயலுக்கு பலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் என்கவுண்டர் நடைபெற்றபோது சட்ட வழிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பெண் மருத்துவரின் தந்தை, “என் மகள் இறந்த பத்து நாள்களில் 4 பேரை சுட்டுக்கொன்ற தெலங்கானா காவல்துறைக்கும் தெலங்கானா அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகள் ஆத்மா இப்போது சாந்தியடையும்” என்று கூறியுள்ளார்.