பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் பெண் மருத்துவர் வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு நிர்பயாவின் தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“இந்த தண்டனையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காவல்துறையினர் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக பெண் மருத்துவரை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்தபோது காவல்துறையினர் அலட்சியம் செய்ததாக கூறப்பட்டது. அலட்சியமாக செயல்பட்ட ஷம்ஷாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது